அவன் பிறந்தது அன்றுதான். அவன் தாய் நெடுநாள் கழித்து ஆனந்தத்தில் கண்ணீர் விட்டதும் அன்றுதான். அழுது கொண்டு இருந்த அந்த பிஞ்சுக்கு தெரிந்தா இருக்கும் தனக்கு அழுகைதான் நிறந்தரம் என்று. அந்தப் பச்சிளம் தாய் தன் மகனைப் பார்த்து மகிழ அருகே இருந்தது அவன் தந்தையல்ல இருபது பச்சிளம் தாய்கள், அந்த அரசு மருத்துவமனையில். தந்தை இன்னும் மகன் முகம் பார்க்கவில்லை, வேறு என்ன செய்ய ? அவனின் அன்றையக் கூலியில் தான் தாய்க்கும் சேய்க்கும் உணவும் மருந்தும்.........
இரு நாளில் வீட்டுக்கு சென்றான்.வீடு கோடை வெயிலில் பற்றி எரியும் கூரை. பணக்காரர் தம் நாய்க்கு ஒதுக்கும் அளவு வீடு. தாய்க்கென முன்று சேலைகள். ஆங்காங்கே கிழியலும் தையலும். தந்தைக்கென இரு சட்டைகள். அதில் பஞ்சர்கள் அதிகம். அவள் சேலைத்தான் அவனுக்குப் போர்வை. தந்தையின் அன்றையக் கூலித்தான் நாளைய உணவு. அதுவும் இருவேளைக்கே. தண்ணீர்த்தான் அவர்களுக்குப் பால். அவனும் வளர்ந்தான். கிழிந்துவிட்டது என பணக்காரர் தூக்கி எறியும் துணித்தான் இவனுக்கு புத்தாடை எனறானது. இரு வேளை உணவு. ஒரு வேளைப் பட்டினி. சில சமயம் ஒரு வேளை உணவு. இரு வேளைப் பட்டினி. இது தான் அவன் கதி. இறுதியில் கண்ணீர் தான் நிறந்தரம். நாட்கள் கண்ணீரிலேயே கழிந்ததன.
.
அன்று தீபாவளி. அவனுக்கோ இரண்டரை வயது. விவரம் சற்று உண்டு. மாடமாளிகைகளில் வெடிச் சத்தம். இங்கோ அடிவயிறு பசியில் தவிக்க அவன் தாயிடம் பணக்காரர் வீட்டைக் காட்டிக் கேட்டான்
"
அம்மா.....ம்மா அது என்னம்மா மேல போய் கலர் கலரா சத்தம் போடுது? "
.
தாய் அவனைத் தழுவி அழுது கொண்டே சொன்னாள்
"
அது ஒன்னுமில்லத் தம்பி நம்ம ஒரு மாச சாப்பாடு"
No comments:
Post a Comment